Hello Guest! Welcome to our Website.
Something you might want to know about us.
Don't be hesitated to contact us if you have something to say.

Tamil FM

                                                                                   

Friday, August 13, 2010

தமிழ் திரைப்படங்கள் (1931 -1950)

தமிழ் திரைப்படங்கள்

அருந்ததி (1943)
அசட்டுப்பிள்ளை (1943)
அபலா (1940)
அலிபாதுஷா (1935)
அதிரூப அமராவதி (1935)
அம்பிகாபதி (1937)
அனாதைப்பெண் (1938)
அதிர்ஷ்டம் (1939)
அதிர்ஷ்ட நட்சத்திரம் (1939)
அசோக்குமார் (1941)
அலிபாபாவும் 40 திருடர்களும் (1941)
அல்லி விஜயம் (1942)
அனந்த சயனம் (1942)
அர்தனாரி (1946)
அஹிம்சாயுத்தம் (1948)
அபூர்வ சகோதர்கள் (1949)

ஆண்டாள் (1948)
ஆண்டாள் திருக்கல்யாணம் (1937)
ஆனந்த ஆஸ்ரமம் (1939)
ஆதித்தன் கனவு (1948)
ஆரவல்லி சூரவல்லி (1946)
ஆர்யமாலா (1941)
ஆனந்தன் (1942)
ஆராய்ச்சி மணி (1942)
ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி (1947)

இந்திரசபா (1936)
இரு சகோதரர்கள் (1936)
இழந்த காதல் (1941)
இது நிஜமா (1948)
இன்பவல்லி (1949)
இதயகீதம் (1950)

உத்தமி (1943)
உத்தமபுத்திரன் (1940)
உதயணன் வாசவதத்தா (1946)
உஷா கல்யாணம் (1936)

ஊர்வசி சாகம் (1940)

என் மனைவி (1942)
என் கணவர் (1948)
என் மகன் (1945)
என் காதலி (1938)

ஏசுநாதர் (1938)
ஏகம்பவாணன் (1947)
ஏழைபடும்பாடு (1950)

கம்பர் (1938)
கந்தலீலா (1938)
கதம்பம் (1941)
கங்காவதார் (1942)
கஞ்சன் (1947)
கங்கணம் (1947)
கன்னிகா (1947)
கனகாங்கி (1947)
கடகம் (1947)
கன்னியின் காதலி (1949)
கண்ணகி (1942)
கண்ணப்ப நாயனர் (1938)
கண்ணம்மா என் காதலி (1945)
கருட கர்வபங்கம் (1936)
கவிரத்ன காளiதாஸ் (1937)
கலிகால மைனர் (1945)
காளiதாஸ் (1931)
காலவா (1932)
காமதேனு (1941)
காமவல்லி (1948)
காளமேகம் (1940)
காலேஜ் குமாரி (1942)
காரைக்கால் அம்மையார் (1943)
கிருஷ்ணலீலா (1934)
கிருஷ்ண அர்ஜுணா (1936)
கிருஷ்ண நாரதி (1936)
கிருஷ்ண துலாபாரம் (1937)
கிருஷ்ண முராரி (1934)
கிருஷ்ண பக்தி (1948)
கிருஷ்ணபிடாரன் (1942)
கிருஷ்ணகுமார் (1941)
கிருஷ்ண விஜயம் (1950)
கிராத ஆர்ஜுணா (1939)
கீதா காந்தி (1949)
குலேபகாவலி (1935)
குமரகுரு (1946)
குமாஸ்தாவின் பெண் (1941)
குட்டி (1937)
குற்றவாளi (1938)
குண்டலகேசி (1946)
குமார குலோத்துங்கன் (1939)
கோதையின் காதல் (1941)
கோகுலதாசி (1948)
கௌசல்யா பரிணயம் (1937)

ஞானசௌந்தரி (1935)

சக்குபாய் (1934)
சகுந்தலா (1934)
சகடயோகம் (1946)
சக்ரதாரி (1948)
சக்திமாயா (1939)
சங்கரசாரியார் சக்திமாயா (1939)
சதி மகானந்தா (1940)
சதி சுகன்யா (1942)
சதி முரளi (1940)
சதி சுலோசனா (1934)
சதி அகல்யா (1935)
சதி லீலாவதி (1936)
சத்யசீலன் (1936)
சத்யவாணி (1940)
சந்தனத்தேவன் (1939)
சந்திரிகா (1950)
சந்திர காந்தா (1936)
சந்திர ஹாசா (1936)
சந்திரமோகன் (1936)
சந்திரலேகா (1948)
சம்சாரம் (1938)
சம்சாரி (1942)
சம்சார நௌகா (1938)
சன்யாசி (1942)
சாந்தா (1941)
சாவித்திரி(1933)
சாரங்கதாரா (1935)
சாமுண்டீஸ்வரி (1937)
சாந்த சக்குபாய் (1939)
சாலி வாகனன் (1945)
சிகாமணி (1948)
சிந்தாமணி (1937)
சிரிக்காதே (1939)
சிவகவி (1943)
சித்ரபகாவலி (1947)
சிவலிங்க சாட்சி (1942)
சிறுதொண்டநாயனார் (1935)
சீதா கல்யாணம் (1933)
சீதா வனவாசம் (1934)
சீதா பஹுரணம் (1939)
சீமந்தினி (1936)
சுபத்ரா அர்ஜுனா (1941)
சுபத்ரா (1946)
சுபத்ரா ஹுரன் (1935)
சுறுசுறுப்பு (1947)
சுலோசனா (1947)
சுவர்ணலதா (1938)
சுகுணசரசா (1939)
சுந்தரமூர்த்தி நாயனார் (1937)
சூர்யபுத்திரி (1941)
சூராபுலி (1945)
சேது பந்தன் (1937)
சேவாசதனம் (1938)
சோகா மேளர் (1942)
சௌ சௌ (1945)
சௌபாக்யவதி (1939)

டம்பாச்சாரி (1935) டேஞ்சர் சிக்னல் (1937)

தர்மபத்தினி (1936)
தர்மவீரன் (1941)
தயாளன் (1941)
தன அமராவதி (1947)
தமிழ்த்தாய் (1940)
தசாவதாரம் (1934)
தட்சயக்ஞ்னம் (1938)
தமிழறியும் பெருமாள் (1942)
தாய்நாடு (1947)
தாசிப்பெண் (1942)
தாசி அபரஞ்சி (194)
தாயுமானவர் (1938)
தாராச சங்கம்(1936)
தானசூர கர்ணா (1940)
தியாகி (1947)
திருநீலகண்டர் (1939)
திருவள்ளுவர் (1941) திருமகிழை ஆழ்வார் (1948)
திவான்பகதூர் (1943)

திலோத்தமா (1940) திகம்பர சாமியார் (1950)
தியாகபூமி (1939)
திரௌபதி வஸ்த்ரபகரணம் (1934)
துருவா (1935)
துளசி பிருந்தா (1938)
துளசி ஜலந்தர் (1947)
துகாரரம் (1938)
தூக்கு தூக்கி (1935)
தெய்வநீதி (1947)
தெனாலிராமன் (1938)
தேவதாஸ் (1937)
தேவதாஸி (1948)
தேவகன்யா (1943)
தேவமனோகரி (1949)
தேசபக்தி (1940)
தேசமுன்னேற்றம் (1938)

நந்தனார் (1935)
நந்தகுமார் (1938)
நல்ல தங்காள் (1935)
நள தமயந்தி (1935)
நல்ல தம்பி (1949)
நவயுவன் (1937)
நவஜீவன் (1949)
நம்நாடு (1949)
நளாயினி (1935)
நவீன சதாரம் (1935)
நவீன சாரங்கதாரா (1936)
நவீன நிருபமா (1937)
நவீன விக்ரமாதித்தன் (1940)
நவீன மார்க்கண்டேயா (1941)
நாட்டிய ராணி (1949)
நாரதர் (1942)
நாம் இருவர் (1947)
நீலமலை கை (1940)

பக்த அருணகிரி (1937)
பக்த புரந்ததாஸ் (1937)
பக்த ஜெயதேவ் (1937)
பக்த ஸ்ரீதியாராஜா (1937)
பக்த துளசிதாஸ் (1937)
பக்த மீரா ஷோக் சுந்தரம் கிராம விஜயம் (1938)
பக்த நாமதேவர் (1938)
பக்த குலேசா (1936)
பக்த குமணன் (1939)
பக்த சேகா (1940)
பக்த கோரகும்பர் (1940)
பக்தி (அம்பரீஷன் சரித்திரம்) (1940)
பக்த கௌரி (1941)
பக்த ஹுனுமான் (1944)
பக்த குலேசா (1936)
பக்த ஜனா (1948)
பக்த காளத்தி (1945)
பட்டினத்தார் (1935)
பத்ம ஜோதி (1937)
பக்கா ரௌடி (1937)
பஞ்சாமிர்தம் (19342)
பங்கஜவல்லி (1947)
பவளக்கொடி (1934)
பரஞ்சோதி (1945)
பள்ளi நாடகம் (1945)
பரசுராமர் (1940)
பம்பாய் மெயில் (1939)
பஸ்மாசூர மோகினி (1937)
பர்த்ருஹுரி (1944)
பதிபக்தி (1936)
பஞ்சாப் கேசரி (1938)
பாக்ய லீலா (1938)
பாமா விஜயம் (1934)
பாமா பரிணம் (1936)
பாலாமணி (1937)
பாலயோகினி (1937)
பாதுகா பட்டாபிஷேகம் (1936)
பாரத்கேசரி (1939)
பாண்டுரங்கன் (1939)
பாரிஜாத புஷ்பஹாரம் (1932)
பாக்கியதாரா (1940)
பாரிஜாதம் (1950)
பால்ய விவாகம் (1940)
பிரகலாதா (1939)
பில்ஹுனா (1948)
பிழைக்கும் வழி (1948)
பிரேமபந்தன் (1941)
பிருத்விராஜ் (1942)
பிராபவதி (1944)
பிரும்மரிஷி விஸ்வமித்ரா (1947)
பீஷ்ம பிரதிக்ஞா (1936)
பூர்ண சந்ரா (1935)
பூகைலால் (1938)
பூம்பாவை (1944)
பூலோக ரம்பா (1940)
பைத்தியக்காரன் (1947)
பொன்முடி (1950)
பொன்னுருவி (1947)
போஜா (1948)
போர்வீரன் மனைவி (1938)

மகாத்மா கபீர்தாஸ் (1936)
மட சாம்பிராணி (1938)
மயூரத்துவஜா (1938) மடையர்கள் சந்திப்பு (1936)
மனேஹுரா (1936)
மகாபராதம் மாயா பஜார் (1935)
மதுரை வீரன் (1939)
மதனகாம ராஜன் (1941)
மதனமாலா (1947)
மகாத்மா உதங்கர் (1947)
மலைமங்கை (1947)
மந்திரி குமாரி (1950)
மந்திரவாதி (1941)
மணிமாலை (1941)
மனமாளiகை (1942)
மனோன்மணி (1942)
மங்கம்மா சபதம் (1943)
மணிமேகலை (1940)
மச்சரேகை (1950)
மருதநாட்டு இளவரசி (1950)
மஹா மாயா (1945)
மகாபலி (1948)
மங்கையர்க்கரசி (1949)
மாயா மாயவன் (1938)
மாத்ருபூமி (1939)
மாணிக்க வாசகம் (1939)
மாயா மச்சீந்திரா (1939)
மார்க்கண்டேயா (1935)
மாரியம்மன் (1948)
மானசம்ரக்சணம் (1945)
மாயாஜோதி (1942)
மானசதேவி (1941)
மின்னல் கொடி (1937)
மிஸ் சுந்தரி (1937)
மிஸ் மாலினி (1947)
மீரா (1945)
மீராபாய் (1936)
மீனாட்சி கல்யாணம் (1940)
முருகன் (1946)
மும்மணிகள் (1940)
மூன்று முட்டாள்கள் (1936)
மெட்ராஸ் மெயில் (1936)
மெட்ராஸ் எக்ஸ்பிரஸ் (1939)
மேனகா (1935)
மோகினி (1948)
மோகினி ருக்மாங்கதா (1935)

யயாதி (1938)

ரத்னாவளi (1935)
ரத்னகுமார் (1949)
ரம்மையின் காதல் (1939)
ராதா கல்யாணம் (1935)
ராமாயணம் (1932)
ராமதாஸ் (1935)
ராமலிங்க சுவாமிகள் (1939)
ராமநாம மகிமை (1939)
ராமானுஜர் (1938)
ராவண விஜயம் (1941)
ராம் ரஹீம் (1946)
ராஜபக்தி (1937)
ராஜமோகன் (1937)
ராஜதுரோகி (1938)
ராஜசேகரன் (1937)
ராஜயோகம் (1940)
ராஜமுக்தி (1948)
ராஜசூயம் (1942)
ராஜ ராஜேஸ்வரி (1944)
ராஜ குமாரி (1947)
ராஜ விக்ரமா (1950)
ராஜ கோபிசந்த் (1941)
ராஜாம்பாள் (1935)
ராஜா தேசிங்கு (1936)
ரிஷ்யசிருங்கர் (1941)
ருக்மணி கல்யாணம் (1936)
ருக்மாங்கதன் (1946)

லவகுசா (1934)
லலிதாங்கி (1935)
லங்காதகனம் (1935)
லவங்கி (1946)
லட்சுமி விஜயம் (1947)
லீலாவதி சுலோசனா (1936)
லைலா மஜ்னு (1950)

வள்ளi(1933)
வள்ளாள மகாராஜா (1937)
வசந்தசேனா (1936)
வனராஜ காசன் (1938)
வனமோகினி (1941)
வாலிபர் சங்கம் (1938)
வாமன அவதாரம் (1940)
வானவில் (1948)
வாழ்க்கை (1949)
வால்மீகி (1946)
விக்ரமஸ்திரி சாகசம் (1937)
விஸ்வாமித்திரா (1936)
வித்யாபதி (1946)
விகிடயோகி (1946)
விசித்ரவனிதா (1947)
வினோதினி (1949)
விப்ரநாராயணா (1937)
விஷ்ணு லீலா (1938)
விக்ரம ஊர்வசி (1940)
விஜயகுமாரி (1950)
விமோசனம் (1940)
விராட பருவம் (1937)
வீர அபிமன்யு (1935)
வீர கர்ஜனை (1939)
வீர சமணி (1939)
வீர வனிதா (1947)
வேதவதி(1941)
வேதாளபுரம் (1947)
வேணுகானம் (1941)
வேதாள உலகம் (1948)
வேலைக்காரி (1949)

ஸ்ரீவள்ளi (1945)
ஸ்ரீனிவாச கல்யாணம் (1934)
ஸ்ரீமதி பரிணயம் (1936)

ஹரிஜன சிங்கம் (1938)
ஹரிதாஸ் (194)
ஹரிஸ்சந்திரா (1932)
ஹரிஹுரமாயா (1940)
ஹரிஜனப் பெண் (1937)

ஜலஜா (1938)
ஜெயபாரதி (1940)
ஜெயக்கொடி (1940)
ஜம்பம் (1947)
ஜகதலப்பிரியன் (1944)
ஷைலக் (1940)
ஷியாம் சுந்தர் (1940)

Thursday, August 12, 2010

நட்பு

நாளொரு பொழுதாய்
நடைமுறை உலகை
நானும் அவளும்
காணப் புறப்பட்டோம்.
நல்ல நண்பர்களாய்…

ஒரு நாள்…

நிலவை ரசிக்க நினைத்தோம்.
ஆனால்..
இரவுவரை தனித்திருக்கும்
தைரியம் நமக்கிருக்கவில்லை.

நிலவு வரும் வரை நாமிருக்க
நம் கலாச்சார கண்களும்
நம்மை விட்டுவைக்கவில்லை.

இன்னொரு நாள்…

கடற்கரை சென்று
காலாற நடந்து
காற்று வாங்க நினைத்தோம்.

ஆனால்…
நம் கைகளைக் கோர்த்தபடி
காலடி பதித்து
அலை நுரை ரசிக்க முடியவில்லை.

அவள் தடுமாறி
அலைக்குள் விழுந்த போதும்
என்னால் அவளை
அணைக்க முடியவில்லை.
கடலோ அவளை நனைத்துப் போனது.

மூழ்கப் போனவளை
மீட்டு வந்தது கண்டும்
எங்களுக்குள் ஊடல் என்று
ஊர் சொன்னது.

அலை கூட அப்போது
நுரை நுரையாய் சிரித்தது.
காற்றும் ஏதோ
கிசு கிசுவென்று கிசுகிசுத்தது.

மழை நாளொன்றில்..
ஒரு குடைக்குள் எங்களால்
நிற்க முடியவில்லை.

நட்பு நனையாதிருக்க
எங்களில் ஒருவர்
மழையில்
நனைய வேண்டியதாயிற்று.

அப்போதெல்லாம்
நட்பு அழுதது.
ஊரோ
துளித்துளியாய் சிரித்தது.

எத்தனையை சுமந்து
நட்பைக் காத்த போதும்

அவன் வாசல்ப் படி வரைக்குமே
என்னால் பயணிக்க முடிகிறது
நட்பையும் நம்மையும் காப்பாற்றியபடி

நட்சத்திரங்களை எண்ணியபோது
அருந்ததி வெள்ளி காட்டுவதாய்
சொன்னார்கள்

அவள் காலில்
முள் எடுத்த போது
மெட்டி மாட்டுவதாய்
சொன்னார்;கள்.

இத்தனைக்குப் பின்னும்
எங்கள் நட்பு
செத்துப் போகவில்லை.
உள்ளமும் கெட்டுப் போகவில்லை.

ஆனால்
எனக்கு
மணமகள் பார்த்த போதும்
அவளுக்கு
மணமகன் பார்த்த போதும்

சில வாய்கள் சொன்னதை
எங்கள் செவிகள் கேட்டபோது
ஆறாம் அறிவு
கொஞ்சம் சிந்தித்தது

நட்பை ஏற்காத உலகில்
என்றும் நண்பர்களாய்
வாழ நினைத்ததால்..

அவளுக்கு
இப்போது வாய்க்கட்டு
எனக்கு
இப்போது கால்க்கட்டு
நட்பு மட்டும் ராஐ நடை போடுகிறது
எனக்கும் அவளுக்கும் இடையில்
எப்போதும்....

செல்லமே!

செல்லமே!

உன்
இதயச்சிறையில்
இன்னும் பல்லாண்டு
சிறை வை.

காந்தக் கண்களால்
மீண்டும் மீண்டும்
கைது செய்.

வார்த்தைகளால்
வதை செய்.
பரவாயில்லை

ஈரமில்லாமல் நட
ஏனென்று
கேட்கமாட்டேன்.

கனவுகளையெல்லாம்
கலைத்துப் போடு.
கலங்கமாட்டேன்.

உண்ண எதுவுமே தராதே!
பசித்திருப்பேன்.

உயிருள்ளவரை உறங்க விடாதே!
விழித்தே இருப்பேன்.

தாகத்திற்கு தண்ணீர் கூட தராதே!
நாவறண்டு துடித்தாலும்
உயிரோடிருப்பேன்.

என்
சோகத்தில் கூட
சேர்ந்து அழாதே!
உனக்காகவும்
நானே அழுவேன்.

இதயத்தில் இடமில்லை
என்று சொல்!
ஏற்றுக் கொள்வேன்.

சிலுவையில் ஏற்றி
பல நூறு முறை
ஆணி அடி.
அப்போதும் சிரிப்பேன்
உனக்காக

ஆனால்
அன்பே
நீ மட்டும்
புன்னகைக்க மறக்காதே!

இந்தச்
சிறைப்பறவைக்கு
உன்
புன்னகையால் மட்டும்
சுவாசம் கொடு.

உன்னைச் சுவாசித்தபடி
இன்னும் நூறாண்டு
வாழவேண்டும்.
 

Chat

Followers